விவசாயிகளுக்கு பயிற்சி

பழையனுார்,மே 20-

பழையனுார் அருகே வீரனேந்தல், குருந்தன்குளம் கிராமத்தில் நெற்பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் தாக்குதல் மேலாண்மை குறித்த பயிற்சி முகாம் வேளாண் உதவி இயக்குனர் மலர்விழி தலைமையில் நடந்தது.

முகாமில் நிலத்திற்கு தகுந்த நெல் ரக தேர்வு மற்றும் பசுந்தாள் உரங்களின் பயன்பாடு குறித்து மலர்விழி விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினார். ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து ஓய்வு பெற்ற வேளாண் அலுவலர் குணசேகரன் ஆலோசனை வழங்கினார். வேளாண் துறையின் கீழ் விவசாயிகளுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து உதவி வேளாண் அலுவலர் முத்து பிரியா விளக்கினார்.

Advertisement