திருக்கோவிலுார் கமிட்டியில் ரூ.1.08 கோடி வர்த்தகம்

திருக்கோவிலுார்: அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் நேற்று ஒரே நாளில் 1000 மூட்டை எள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் 1.08 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது..

திருக்கோவிலுார் சுற்று வட்டாரப் பகுதிகளில் எள் அறுவடை தீவிரமடைந்திருக்கும் நிலையில், நேற்று ஒரே நாளில் 1000 மூட்டை எள் ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டது. ஒரு மூட்டை அதிகபட்ச விலையாக 10,479 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 5,590 ரூபாய்க்கும் விற்பனையானது. அதேபோல் மக்காச்சோளம் 930 மூட்டை, நெல் 455 முட்டை என மொத்தம் 219 மெட்ரிக் டன் விளை பொருட்கள் ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் 1.08 கோடி வர்த்தகமானது. வரும் நாட்களில் எள் வரத்து மேலும் அதிகரிக்கும் என்கின்றனர் விவசாயிகள்.

Advertisement