எல்லை முத்துமாரியம்மன் கோவில் 77ம் ஆண்டு உற்சவ விழா 

வானுார்: புள்ளிச்சப்பள்ளம் எல்லை முத்து மாரியம்மன் கோவில் 77ம் ஆண்டு உற்சவ விழா துவங்கியது.

விழா நேற்று காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து இரவு அம்மன் வீதியுலா நடந்தது. இன்று 20ம் தேதி முதல் 25ம் தேதி வரை இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடக்கிறது.

வரும் 26ம் தேதி காலை 9;00 மணிக்கு அபிேஷக ஆராதனையும், காலை 11:00 மணிக்கு சாலை வார்த்தலும், 2;00 மணிக்கு வல்லாளகண்டன் கோட்டை அழித்தலும், அதனைத் தொடர்ந்து செடல் உற்சவமும் நடக்கிறது. 27ம் தேதி மாலை 3;00 மணிக்கு ஆரியமாலா கருப்பழகி, காத்தவராயன் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

Advertisement