தொடர்ந்து மிரட்டல் விடுத்ததால் கொன்றோம் ரவுடி கொலையில் கைதானவர்கள் வாக்குமூலம்
கோட்டக்குப்பம்: விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த கூனிமேடுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் மகன் சிவகுரு, 37; ரவுடி. கடந்த 16ம் தேதி இரவு, கீழ்புத்துப்பட்டு காட்டுப்பகுதியில் நண்பர்களுடன் மது அருந்தினார். அப்போது, சிவகுரு மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இது குறித்து கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து கூனிமேடு பிச்சாண்டி மகன் பிரகாஷ், 27; கீழ்புத்துப்பட்டு, அன்னிச்சங்குப்பம் செந்தில்குமார் மகன் பார்த்திபன், 23; கூனிமேடுகுப்பம் முருகன் மகன் ஜான்சன், 23, குணசேகர் மகன் கலைவாணன், 31; முருகன் மகன் முகுந்தன், 24; செந்தில்குமார் மகன் பொக்கை கார்த்திக், 26; ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
விசாரணையில், கடந்த மார்ச் மாதம் கூனிமேடு கடற்கரையில் நடந்த மாசிமக திருவிழாவில் கொலையான சிவகுருஅதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் மற்றும் பொக்கை கார்த்திக் ஆகியோருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, கடந்த 13ம் தேதி கூனிமேடு பகுதியில் நடந்த கிரிக்கெட் போட்டியில் சிவகுரு, பிரகாஷை தக்கியுள்ளார். கடந்த வாரம் நடந்த பிறந்தநாள் நிகழ்ச்சி ஒன்றிலும் சிவகுரு, கார்த்திக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
இதே போல் இந்த கொலை தொடர்புடைய 6 பேரிடமும், சிவகுரு அடிக்கடி தகராறு செய்து தாக்கி வந்ததோடு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் 6 பேரும் சேர்ந்து சிவகுருவை கொலை செய்தது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 2 பைக்குகள், கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள், மொபைல் போன்களை பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும்
-
விஜய்யை கடவுள் எனக்கூறி பதவியேற்ற தவெக எம்எல்ஏ; புதுச்சேரி சபாநாயகர் கண்டிப்பு
-
'போர்வாள்' நாளிதழ் துவங்கினார் இபிஎஸ்!
-
வெளிநாடுகளில் இந்தியாவின் கவுரவத்தை உறுதி செய்யும் மோடி: சரத் பவார் பாராட்டு
-
மெலோனிக்கு 'மெலோடி'யை பரிசளித்த பிரதமர் மோடி; வைரலாகும் கலகலப்பு வீடியோ
-
அதிமுக எம்எல்ஏக்கள் அமைச்சரவையில் இடம்பெறமாட்டார்கள்; திருமா தகவல்
-
புதிய வாகனத்தை இயக்கிப் பார்த்து முதல்வர் விஜய் ஆய்வு