ரூ.8 லட்சம் குட்கா பறிமுதல்: மங்கலம்பேட்டையில் பரபரப்பு

விருத்தாசலம்: ரூ.8 லட்சம் மதிப்பிலான 630 கிலோ குட்காவுடன் கேட்பாரற்று நின்ற காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கடலுார் மாவட்டம், மங்கலம்பேட்டை அடுத்த டி.மாவிடந்தல், திருச்சி - சென்னை புறவழிச்சாலையில், கனரக வாகனங்கள் நிறுத்துமிடத்தில், நேற்று காலை 11:00 மணியளவில், கியா கார் (டிஎன்04- ஏ.டபிள்யூ8808) நின்றிருந்தது.

தகவலறிந்த விருத்தாசலம் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன், மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையிலான போலீசார் காரை

சோதனை செய்தனர். அதில், 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான 630 கிலோ எடையுள்ள ஹான்ஸ், கூல் லிப் உள்ளிட்ட குட்கா பொருட்கள் அடங்கிய மூட்டைகள் இருந்தது.

அதையடுத்து, போலீசார் காரை பறிமுதல் செய்து, மங்கலம்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்து வந்தனர்.

விசாரணையில், காரில் இருந்த நம்பர் பிளேட் போலியானது என தெரிந்தது.

மேலும், காரில் இருந்து இறங்கிய இரண்டு நபர்கள், திருச்சி நோக்கி சென்ற மற்றொரு காரில் தப்பிச் சென்றதும் தெரியவந்தது.

இதுகுறித்து மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையிலான போலீசார் வழக்குப் பதிந்து, 630 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.

மேலும், தப்பியோடி மர்ம நபர்கள் குறித்து மொபைல் போன் டவர் மூலம் விசாரித்து வருகின்றனர்.

Advertisement