பாதாள சாக்கடை பராமரிப்பு:  முக்கிய ரோடுகளில் தேவை 

உடுமலை: உடுமலை நகரில் போக்குவரத்து நிறைந்த ரோடுகளில், பாதாள சாக்கடை மூடி சேதமடைந்து வாகன ஓட்டுநர்களை அச்சுறுத்தி வருகிறது.

உடுமலை நகரில், பாதாள சாக்கடை திட்டம் பயன்பாட்டுக்கு வந்து பல ஆண்டுகளாகியும், பல்வேறு பிரச்னைகள் தொடர்கதையாக உள்ளது. குறிப்பாக, நகரின் முக்கிய வீதிகளில், பாதாள சாக்கடை ஆளிறங்கு குழி மூடிகள், சேதமடைந்தாலும் அவற்றை சீரமைப்பதில்லை.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த பஸ் ஸ்டாண்ட் பை-பாஸ் ரோடு, சர்தார் வீதி, ராஜேந்திரா ரோடு, ஏரிப்பாளையம் உள்ளிட்ட பல இடங்களில், சேதமடைந்த ஆளிறங்கு குழி மூடி சீரமைக்கப்படாமல் உள்ளது.

அப்பகுதியை கடக்கும் போது வாகன ஓட்டுநர்கள் தடுமாற வேண்டியுள்ளது. விபத்துகள் ஏற்படும் முன், சீரமைப்பு பணிகளை நகராட்சி நிர்வாகத்தினர் மேற்கொள்ள வேண்டும்.

Advertisement