கிரிக்கெட்டில் யங் சி.சி., அணிக்கு கோப்பை

சென்னை: புளூ ஸ்கை கிரிக்கெட் அகாடமி சார்பில், ஸ்ரீ குருராகவேந்திர சுவாமி லீக் கம் நாக் – அவுட் கோப்பை, ‘ரெட்பால் டி – 20’ கிரிக்கெட் தொடரின் ‘பி’ மண்டல இறுதி போட்டி, முகப்பேரில் நடந்தது.

முதலில் பேட்டிங் செய்த ஓல்ட் மாங்கஸ் சி.சி., அணி 19 ஓவர்களில் 182 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஹரிஹரன் ரவி 51, வைபவ் 47 ரன்கள் எடுத்தனர். யங் சி.சி., அணி கிஷோர், பந்து வீசி நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

அடுத்து களமிறங்கிய யங் சி.சி., அணியின் விஜய் ராம் 63 ரன்கள் விளாசி, வெற்றிக்கு அடித்தளம் அமைத்தார். 13.5 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று, யங் சி.சி., அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

ஆட்ட நாயகன் விருது யங் சி.சி., வீரர் கிஷோருக்கு வழங்கப்பட்டது. சிறந்த பேட்ஸ்மேனாக அதே அணியின் வீரர் விஜய் தேர்வு செய்யப்பட்டார். சிறந்த பந்துவீச்சாளராக ஓல்ட் மாங்க்ஸ் சி.சி., வீரர் கிருஷ்ணா தேர்வானார். தொடர் நாயகன் விருது அதே அணியின் பாபுவுக்கு வழங்கப்பட்டது.

Advertisement