திருப்பாச்சூர் வாசீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்
திருப்பாச்சூர்:திருப்பாச்சூர் தங்காதலி அம்மன் உடனாய வாசீஸ்வரசுவாமி கோவிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவம் (மே 20) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவள்ளூர் அடுத்த, திருப்பாச்சூரில் அமைந்துள்ளது தங்காதலி அம்மன் உடனாய வாசீஸ்வர சுவாமி கோவில். ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான இங்கு வைகாசி விசாக பிரம்மோற்சவ பெருவிழா மே 20, காலை கொடியேற்றத்துடன் துவங்கியது . பின் மாலையில் சுவாமி ரிஷப வாகனத்தில் வீதியுலா வந்தார்.
முன்னதாக 14ம் தேதி பந்தக்கால் நிகழ்ச்சியும், 18ம் தேதி காலை கிராம தேவதையான பாசூரம்மன் வழிபாடும், மாலையில் பாசூரம்மன் வீதியுலாவும் நடந்தது.
வரும் 25ம் தேதி திருக்கல்யாணமும், ஜூன் 1ம் தேதி காலை கொடியிறக்கத்துடன் வைகாசி திருவிழா நிறைவு பெறும் என, ஹிந்து சமய நிலைய அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.