கணவர் மாயம்: மனைவி புகார்

குறிஞ்சிப்பாடி: கணவர் மாயமானது குறித்து மனைவி போலீசில் புகார் அளித்தார்

குறிஞ்சிப்பாடி அடுத்த வேகாக்கொல்லை, அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் சுந்தர்ராஜன்,30;

இவரது மனைவி கல்பனா, 28; இந்த தம்பதிக்கு, 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. குழந்தைகள் இல்லை. சமீபத்தில், குறிஞ்சிப்பாடியில் தங்கி இருந்த சுந்தர்ராஜன், திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் அவரைப் பற்றிய தகவல் இல்லை. கல்பனா தனது கணவர் மாயமானது குறித்து குறிஞ்சிப்பாடி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement