முதியவரிடம் மொபைல் போன் திருட முயன்றவரை மடக்கி பிடித்த பயணியர்
சென்னை: எழும்பூரில் கார் ஓட்டுநரிடம் மொபைல் போன் திருட முயன்றவரை, பயணியர் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
திருவொற்றியூர், ஏகையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மனோகரன், 68; கார் ஓட்டுநர். இவர், நேற்று காலை திருவொற்றியூரில் இருந்து மாநகர பேருந்தில் ஏறி, எழும்பூர் ரவுண்டானா பேருந்து நிறுத்ததில் இறங்கினார்.
அப்போது ஒருவர், மனோகரனின் பேன்ட் பாக்கெட்டிலிருந்த மொபைல்போனை திருட முயன்றார். சுதாரித்த மனோகரன் பாக்கெட்டை இறுக்கமாக பிடித்துக் கொண்டார்.
பின் பொதுமக்கள் உதவியுடன், மொபைல்போன் திருட முயன்றவரை பிடித்து எழும்பூர் போலீசாரிடம் ஒப்படைத்தார்.
விசாரணையில், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜான் பாஸ்கர், 62 என்பதும் அவர் மீது, 14 வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement