தலைமை பொறியாளர் 'சஸ்பெண்ட்'
சென்னை: தமிழக மின் வாரியத்தில், மரபுசாரா மின்சார பிரிவு தலைமை பொறியாளராக பணிபுரிந்த சந்திரசேகரன் என்பவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.
மரபுசாரா மின்சார பிரிவு தலைமை பொறியாளராக உள்ள சந்திரசேகரன், பசுமை எரிசக்தி கழகத்தின் தொழில்நுட்ப இயக்குநர் பதவியையும், கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார்.
அவரை, 'சஸ்பெண்ட்' செய்து, மின் வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன், நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சட்டசபை தேர்தல் நடத்தை விதி அமலில் இருந்த காலத்தில், சில சூரியசக்தி மின் திட்டங்களுக்கு, அவர் ஒப்புதல் அளித்துள்ளதால், சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக, தகவல் வெளியாகியுள்ளது.
வாசகர் கருத்து (1)
மதுரை வீரன் - ,
21 மே,2026 - 08:48 Report Abuse
உமக்கு இது தேவையா கோபால்...!!! 0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement