59 ஆண்டுக்குப்பின் அமைச்சரவையில் காங்.,

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் காங்., சார்பில் இருவர் இடம் பெற உள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடைசியாக 1962 - 1967ல் முதல்வர் பக்தவச்சலம் தலைமையிலான காங்., ஆட்சி நடந்தது. இதில் முதல்வருடன் சேர்த்து வெங்கட்ராமன், கக்கன், ராமையா, ஜோதி வெங்கடாசலம், நல்லசேனாபதி, பூவராகன், மஜீத் என எட்டு பேர் அமைச்சர்களாக இருந்தனர். தற்போது 59 ஆண்டுக்குப்பின் மீண்டும் அமைச்சரவை வாய்ப்பு கிடைத்துள்ளது.

அரசியலுக்கு வந்த பல ஆண்டுகளுக்குப் பிறகு அமைச்சராகும் வாய்ப்பு விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கிடைத்துள்ளது.

Advertisement