திருட்டு போன 7 பைக் மீட்புபழங்குற்றவாளிக்கு காப்பு
ஈரோடு:ஈரோடு நகரின் பல்வேறு பகுதிகளில், கடந்த சில மாதங்களாக டூவீலர்களை மர்ம நபர்கள் திருடி செல்வது தெரியவந்தது. டூவீலர்கள் காணாமல் போன இடங்களில் உள்ள, சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆராய்ந்தனர். அப்போது வாலிபர் ஒருவர் வந்து செல்வது தெரியவந்தது.
இது குறித்து ஈரோடு டவுன் போலீசார் விசாரித்து, மொடக்குறிச்சி காட்டுப்பாளையம் கண்ணன் மகன் மாதேஸ்வரன், 37, என்பவர் சிக்கினார். இவர் பழங்குற்றவாளி. இவர், ஈரோடு டவுன் சப்-டிவிசனில் உள்ள பல பகுதிகளில் கைவரிசையை காட்டி, டூவீலர்களை திருடியது தெரியவந்தது. இவரிடம் இருந்து, 7 பைக்குகளை போலீசார் மீட்டு கைது செய்தனர்.
திருடும் பைக்குகளை, பைனான்ஸ் நிறுவனத்தில் அடகு வைத்து பணம் பெற்று செல்வது வாடிக்கை என்பது உறுதியானது. அவரை சிறையில் அடைக்க, மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்ற போது, இதய நோயாளி என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார்
ஜாமினில் விடுவித்தனர்.