10ம் வகுப்பு தேர்வில் அரசு மகளிர் பள்ளி 88 சதவீத தேர்ச்சி
குளித்தலை : குளித்தலை, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 243 மாணவியர் தேர்வு எழுதினர். இதில், 214 பேர் தேர்ச்சி பெற்றனர். இது, 88 சதவீதம். மாணவி ஷமா, 490 மதிப்பெண், ஜனனிகா, 487 மதிப்பெண், தரணிஷா, 485 மதிப்பெண் பெற்றனர். மாணவியரை தலைமை ஆசிரியர் சுஜாதா சியாமளா மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தினர்.
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 125 பேர் தேர்வு எழுதினர். இதில், 100 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். மாணவன் சுதன்சிபி 477 மதிப்பெண் பெற்று முதலிடம், 469 மதிப்பெண்ணுடன் ரிஷிகேஷ் இரண்டாமிடம், 445 மதிப்பெண்களுடன் ஹரி பிரகாஷ் மூன்றாமிடம் பெற்றனர். பள்ளி, 80 சதவீதம் தேர்ச்சி பெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் வைர மூர்த்தி மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை பாராட்டினர்.
கோட்டைமேடு அரசு ஆதி திராவிட நல மேல்நிலைப் பள்ளியில், 78 மாணவர்கள் தேர்வு எழுதினார். இதில், 62 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். பள்ளி, 80 சதவீத தேர்ச்சி பெற்றது. மாணவி தேவதர்ஷினி, 424 மதிப்பெண் பெற்றார், ஹரிணி, 418 மதிப்பெண், சிவ தவஸ்ரீ, 384 மதிப்பெண் பெற்றனர். தேர்ச்சியடைந்தவர்களை, தலைமை ஆசிரியர் கலைமதி
பாராட்டினார்.ஆலத்துார் அரசு உயர்நிலைப் பள்ளியில், 28 மாணவர்கள் தேர்வு எழுதினர். 21 பேர் தேர்ச்சி பெற்றனர். இனுங்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், 70 மாணவர்கள் தேர்வு எழுதினர். 48 பேர் தேர்ச்சி பெற்றனர்.
மேலும்
-
சதுரகிரியில் அமாவாசை வழிபாடு
-
மாணவர்கள் சங்கமம்
-
2022ல் இருந்து இழுபறியாக இருக்கும் சிங்கை பாலம்: ரூ.110 கோடி டூ 170 கோடியாக உயர்ந்தது மதிப்பீடு
-
'கிரியேட்டிவிட்டி ஸ்கில்ஸ்' இருந்தால் அடுத்த 'லெவலுக்கு' கொண்டு செல்லும் :ஆர்.ஐ.டி., முதல்வர் மகேஸ்வரி பேச்சு
-
புதுச்சேரியில் நிலப்பயன்பாடு நடைமுறைகள்... அதிரடி மாற்றம்:தானியங்கி முறையில் வருகிறது 'அப்டேட்'
-
திருவதிகை சரநாராயண பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பு