2022ல் இருந்து இழுபறியாக இருக்கும் சிங்கை பாலம்: ரூ.110 கோடி டூ 170 கோடியாக உயர்ந்தது மதிப்பீடு
கோவை: சிங்காநல்லுாரில் மேம்பாலம் கட்டுவதற்கான பணி, 2022ல் துவங்கி, 4 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ரூ.110 கோடியிலான திட்ட மதிப்பீடு ரூ.170 கோடியாக உயர்ந்திருக்கிறது. 200 கோடியாக அதிகரிப்பதற்கு முன், மேம்பாலத்தை கட்டி முடிக்க மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கோவையின் பிரதான ரோடுகளில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடி தவிர்க்க, சிங்காநல்லுார், சாயிபாபா காலனி, சரவணம்பட்டி சந்திப்புகளில் மேம்பாலங்கள் கட்ட, தேசிய நெடுஞ்சாலைத்துறை 2022ல் முடிவு செய்தது. ரூ.282.21 கோடி ஒதுக்கி, டெண்டர் கோரியது. ஒப்பந்த நிறுவனம் இறுதி செய்து வேலையை துவக்க இருந்தனர்.
தொழில்துறை வலியுறுத்தல் 'மெட்ரோ ரயில்' இயக்க வழித்தடம் ஆய்வு செய்வதால், மேம்பாலப் பணிகள் செய்வதற்கு மெட்ரோ நிறுவனம் தடை விதித்தது. அதிர்ச்சி அடைந்த தொழில்துறையினர், 'மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி தர வேண்டும்; நிதி ஒதுக்க வேண்டும்; இழப்பீடு வழங்கி நிலம் கையகப்படுத்த வேண்டும். அத்திட்டம் செயல்பாட்டுக்கு வர பல ஆண்டுகளாகும். தற்போதைய பிரச்னைக்கு தீர்வு காண மேம்பாலங்கள் அவசியம்' என தமிழக அரசிடம் வலியுறுத்தினர். தமிழக அரசு அழுத்தம் கொடுத்ததும் சிங்காநல்லுார், சாயிபாபா காலனியில் கட்டுவதற்கு அனுமதி தந்தது; சரவணம்பட்டிக்கு தரவில்லை.
உயர்ந்தது மதிப்பீடு சாயிபாபா காலனியில் கட்டுமான பணி நடக்கிறது; இரு மாதத்துக்குள் முடிக்க உள்ளனர். சிங்காநல்லுாரில் பாலம் பணி துவங்கவே இல்லை. 2022ல் ரூ.110.80 கோடிக்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. 4 ஆண்டுகளாகி விட்டன. கட்டுமான பொருட்கள் விலை ஏற்றத்தால், மதிப்பீடு ரூ.170 கோடியாக உயர்ந்திருக்கிறது. தற்போது ஒப்பந்த நிறுவனம் இறுதியாகி விட்டது. கோரியுள்ள ஒப்பந்த தொகையை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் ஆய்வு செய்கின்றனர். ஒரு வாரத்துக்குள் முடிவாகி விடும் என்கின்றனர் அதிகாரிகள். மதிப்பீடு ரூ.200 கோடியாக அதிகரிப்பதற்குள் பாலம் பணியை விரைந்து முடிக்க மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஒண்டிப்புதுார் பாலம் அருகே செயின்ட் ஜோசப் பள்ளிக்கு முன் துவங்கி மின்வாரிய அலுவலகம் வரை 2,400 மீட்டர் நீளத்துக்கு நான்கு வழி மேம்பாலம் கட்ட வேண்டும். ரோடு இருபுறம் தலா 1.5 மீட்டர் அகலம் வடிகால், 5.5 மீட்டர் அகலத்தில் இருந்து 7 மீட்டராக சர்வீஸ் ரோடு விஸ்தரிக்க வேண்டும்.
நிலம் எடுப்பு எப்போது இறங்கு தளம், ஏறு தளம் அமையும் இடங்களில் சர்வீஸ் ரோட்டில் வாகனங்கள் சிரமமின்றி செல்ல நிலம் கையகப்படுத்த வேண்டும். அரசு மற்றும் தனியார் இடங்கள் சேர்த்து 1,201 சதுர மீட்டர் நிலம் எடுக்க வேண்டும். இச்செலவை தமிழக அரசு ஏற்றுக் கொள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை அறிவுறுத்தியது.
அதற்கு இன்னும் நிலம் அளவீடு செய்யவே இல்லை. எவ்வளவு நிலம் தேவை, யார் யாருக்கு சொந்தமான நிலம் கையகப்படுத்த வேண்டியிருக்கிறது என அளவீடு செய்து முடிவெடுக்க வேண்டும். அவர்களுக்கு இழப்பீடு வழங்கி, நிலம் கையகப்படுத்த வேண்டும். நிலம் எடுக்காமல் மேம்பாலம் கட்டினால், ஏறு தளம், இறுங்கு தளம் பகுதியில் ரோடு குறுகலாக இருக்கும். போக்குவரத்து நெருக்கடி ஏற்படும்.
பஸ் ஸ்டாண்ட் இருக்கு ஏனெனில், சிங்காநல்லுார் சந்திப்புக்கு அருகில் பஸ் ஸ்டாண்ட் உள்ளது. பல்லடம் வழியாக செல்லும் அனைத்து பஸ்களும் இவ்வழித்தடத்தில் சென்று, வருகின்றன. கோவையில் இருந்து ஒண்டிப்புதுார் நோக்கிச் செல்வோர், மேம்பாலத்தில் சென்று விடுவர். வரதராஜபுரம் ரோடு - வெள்ளலுார் ரோடு - ஒண்டிபுதுார் ரோடு சந்திக்கின்றன. குறுக்கு ரோடுகளில் வருவோர் சாலையை மட்டுமே பயன்படுத்துவர். பாலம் கட்டுவதால் சாலை சுருங்கினால், போக்குவரத்து நெருக்கடி மேலும் அதிகரிக்கும். தேவையான நிலம் எடுத்து சாலையை விஸ்தரிக்க வேண்டும். இல்லையெனில், மேம்பாலம் கட்டினாலும் சாலை மார்க்கத்தில் பிரச்னை தீராது. அதனால், நிலம் எடுப்பு பணியை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்த வேண்டும்.
@block_B@
தொழில்துறையினர் கூறுகையில், 'சிங்காநல்லுார் சந்திப்பில் மேம்பாலம் கட்ட பல ஆண்டுகளாக கோரி வருகிறோம். தற்காலிக தீர்வாக 'யூ டேர்ன்' செய்யப்பட்டது. இருப்பினும் 'பீக் ஹவர்ஸில்' போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துகின்றனர். இல்லையெனில், 4 ரோடுகளிலும் வாகனங்கள் சிக்கி விடுகின்றன. மேம்பாலம் கட்டுவதே ஒரே வழி. விரைந்து பணியை துவக்க வேண்டும். சர்வீஸ் ரோடு போடுவதற்கு போதுமான நிலம் கையகப்படுத்த வேண்டும்' என்றனர். block_B
மேலும்
-
சொல்கிறார்கள் –––––––––– சேர்ந்து வாழாவிட்டாலும் சிறந்த பெற்றோராக இருக்கணும்!
-
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
-
அதிக மழைப்பொழிவு எங்கே?
-
கோவில் நில ஆக்கிரமிப்பு கும்பல் அரசுக்கு எதிராக பிரசாரம் : முறியடித்து நிலத்தை மீட்க பக்தர்கள் வலியுறுத்தல்
-
முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
-
மிரட்டும் எதிரிகள் : பெண் அமைச்சர் ஆவேசம்