'கிரியேட்டிவிட்டி ஸ்கில்ஸ்' இருந்தால் அடுத்த 'லெவலுக்கு' கொண்டு செல்லும் :ஆர்.ஐ.டி., முதல்வர் மகேஸ்வரி பேச்சு

விழுப்புரம்: 'மாணவர்களுக்கு 'கிரியேட்டிவிட்டி ஸ்கில்ஸ்' இருந்தால் மட்டுமே அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும்' என ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி முதல்வர் மகேஸ்வரி பேசினார்.

விழுப்புரத்தில் 'தினமலர்' நாளிதழ் மற்றும் ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து நடத்திய வழிகாட்டி நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

தினமும் புதுப்புது விஷயங்களுடன் மலரும் 'தினமலர்' நாளிதழுடன் இணைந்து, ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து வழிகாட்டி நிகழ்ச்சி நடத்துகிறது.

பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ், டெக்னிக்கல் ஸ்கில்ஸ், பிராப்ளம் சால்விங் தகுதி கட்டாயம் இருக்க வேண்டும். தமிழ் மீடியம் படித்துள்ளவர்கள் பொறியியல் படிப்பு குறித்து பயப்பட வேண்டாம். 'ஏஐ' அனைத்து இடங்களிலும் உள்ளது. மாணவர்களுக்கு 'கிரியேட்டிவிட்டி ஸ்கில்ஸ்' இருக்க வேண்டும். அது தான் உங்களை அடுத்த 'லெவலுக்கு' கொண்டு செல்லும். 'டீம் ஒர்க்' மிக, மிக முக்கியம். கம்பெனிகளில் டீமாக இருந்தால் தான் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க முடியும். பயனாளர்களுக்கு ஏற்றவாறு புதிய வடிவமைப்புகள் இருக்க வேண்டும்.

இப்போது இணையதளம் இல்லாத வாழ்க்கையே இல்லை. தலைமுறைக்கு தலைமுறை இணையதளத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. எந்த டெக்னாலஜி படித்தாலும் கூடுதலாக ஒரு டெக்னாலஜியை எடுக்க வேண்டும்.

எங்கள் நிறுவனத்தில் 'குவாண்டம் டெக்னாலஜி' உள்ளது. எதுக்கு 'டிமான்ட்' இருக்கிறது என்பது தெரிந்து கொண்டு படிக்க வேண்டும். எங்கள் கல்லுாரியில் முதலாம் ஆண்டிலேயே மாணவர்களின் ஐடியாவை கேட்கிறோம்.

இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டுகளில் அதனை வடிவமைக்க ஏற்பாடு செய்வோம். மாணவர்களுக்கு திறமை மிக மிக முக்கியம். இன்ஸ்டாகிராமை ஸ்குரோல் செய்து நேரத்தை வீணாக்க வேண்டாம். கல்லுாரி திறக்கும் வரை இன்டர்நெட்டை பயன்படுத்தி ஒரு டெக்னாலஜியை உருவாக்க தயாராகுங்கள்.

இவ்வாறு மகேஸ்வரி பேசினார்.

Advertisement