சதுரகிரியில் அமாவாசை வழிபாடு
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் வைகாசி மாத அமாவாசை வழிபாட்டை முன்னிட்டு திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
விடுமுறை நாளான நேற்று அதிகாலை முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தாணிப்பாறை மலை அடிவாரத்தில் குவிந்தனர். இதனையடுத்து காலை 6:00மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர்.
காலை 10:00 மணி வரை 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறினர். அதன் பின்பும் பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர்.வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்ட நிலையிலும் பக்தர்கள் மலையேறினர்.
கோயிலில் சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சன்னதியில் அமாவாசை வழிபாடு பூஜைகளை கோயில் பூசாரிகள் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
-
ஆசிய - பசிபிக் மாநாட்டில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் கோவை மாணவி
-
கிரைம் கார்னர்: கோவை
-
நாளைய மின் தடை :கோவை
-
2037ல் பயணிப்போர் எண்ணிக்கை...1.2 கோடி!: 'டேக் ஆப்' ஆகும் கோவை ஏர்போர்ட்
-
திருக்கோவிலுார் புதிய பஸ் நிலைய பணி துவங்குவது... எப்போது?:பொதுமக்கள் பாதிப்புக்கு தீர்வு காண கோரிக்கை
Advertisement
Advertisement