6.06 லட்சத்துக்குநிலக்கடலை ஏலம்

கரூர்:சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 6 லட்சத்து, 6,233 ரூபாய்க்கு நிலக்கடலை விற்பனையானது. கரூர் மாவட்டம், நொய்யல் அருகே சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை ஏலம் நடந்தது. ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 250 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக, 73.70 ரூபாய், அதிகபட்ச விலையாக, 85.60 ரூபாய், சராசரியாக, 84.20 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம் 7,611 கிலோ எடையுள்ள நிலக்கடலை, 6 லட்சத்து, 6,233 ரூபாய்க்கு விற்பனையானது.

Advertisement