சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை
கடலுார்: ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், 10 ம்வகுப்பு அரசு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.
கடலுார் துறைமுகம் ஸ்ரீ சரஸ்வதி வித்யலயா மெட்ரிக் பள்ளியில், 10 ம்வகுப்பு அரசு பொதுத்தேர்வில் பங்கேற்ற அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று, 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர்.
பள்ளி மாணவி அனுஷ்கா 486 மதிப்பெண்; சுவாதி 469 மதிப்பெண்; ரிஷித்தா 468 மதிப்பெண்; பெற்றனர்.
தேர்வு எழுதிய மாணவர்களில், 59 பேர் முதல்வகுப்பில் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். சிறப்பிடம் பெற்ற மாணவியர்கள் மற்றும் அவர்களது பெற்றோரை பள்ளி நிறுவனர் சொக்கலிங்கம், தாளாளர் கஸ்துாரி சொக்கலிங்கம், மக்கள் தொடர்புஅலுவலர் சிவராஜ், முதல்வர் உதயகுமார் சாம் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் பள்ளித்தலைவர் சிவக்குமார், நிர்வாக செயல்அலுவலர் லட்சுமி ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர்.