மங்களம் மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி

புவனகிரி: புவனகிரி மங்களம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

புவனகிரி மங்களம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 10 ம் வகுப்பு அரசு தேர்வை எழுதிய 90 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவி நவதாரணி 491; மாணவர் சபரிநாதன் 490; மாணவி அபிநயா 488; ஆகிய மதிப்பெண்கள் பெற்றனர்.

கணித பாடத்தில், 9 மாணவர்களும், சமூக அறிவியல் பாடத்தில், 2 மாணவர்களும் என மொத்தம், 11 பேர் மதிப்பெண்பெற்றுள்ளனர்.

சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளை பள்ளி நிறுவனர் தமிழ்மணி, செயலாளர் அங்கையற்கண்ணி, அறக்கட்டளை தலைவர் கண்மணி, இயக்குனர் ரத்னா ஆகியோர் சால்வை அணிவித்து ஊக்கப்பரிசுகளை வழங்கி பாராட்டினர்.

நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் பங்கேற்றனர்.

Advertisement