நிழற்குடையில் இருக்கைகள் சேதம் சீரமைக்க பயணியர் வலியுறுத்தல்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் விளக்கடிகோவில் தெரு, கீரை மண்டபம் பேருந்து நிறுத்தம் நிழற்குடையில், சேதமடைந்த நிலையில் உள்ள இருக்கைகளை சீரமைக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் விளக்கடிகோவில் தெரு, கீரை மண்டபம் பேருந்து நிறுத்தத்தில், 2019 – 20ம் நிதியாண்டில், அப்போதைய காஞ்சிபுரம் தி.மு.க., – எம்.எல்.ஏ., எழிலரசன் ஒதுக்கீடு செய்த நிதியில், நவீன பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது.
காஞ்சிபுரம் பேருந்து நிலையம், உத்திரமேரூர், வந்தவாசி வழித்தடத்தில் செல்லும் பேருந்தில் பயணிக்கும் பயணியர், இந்த நிழற்குடையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நிழற்குடையில் மூன்றாக இணைக்கப்பட்டுள்ள இரு பிரிவு இருக்கைகள் உடைந்த நிலையில் உள்ளன. இதனால், பயணியர் இருக்கையில் அமர முடியாமல் நிற்க வேண்டிய சூழல் உள்ளது.
எனவே, உடைந்த நிலையில் உள்ள இருக்கைகளை சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும்
-
நம்ம பள்ளி.. நம்ம வாத்தியார்.. சாதனை படைக்கும் கொத்தட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி
-
வளர்ந்த இந்தியாவை நோக்கிய பயணம்; உலக நாடுகளும் இணைய விரும்புவதாக மோடி பெருமிதம்
-
ஸ்டாலினுக்கு விடாமல் முட்டுக் கொடுக்கும் திருமா
-
மோடிக்கு மசாலா பொரி கொடுத்த வியாபாரிக்கு கொலை மிரட்டல்; திரிணமுல் கட்சியினர் அட்டூழியம்
-
சீனாவில் துயர சம்பவம்; நிலக்கரி சுரங்க வெடி விபத்தில் 80 பேர் பலி
-
உ.பி.,யில் கொளுத்தும் வெயில்; டாப் 50 நகரங்களில் 31 இங்க தான்!