10ம் வகுப்பு தேர்வில் அசத்திய அரசு பள்ளிகள்
அன்னூர்: அன்னூர் வட்டாரத்தில், அரசு பள்ளிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக தேர்ச்சி பெற்றுள்ளன.
காட்டம்பட்டி தவத்திரு சாந்தலிங்க அடிகளார் அரசு மேல்நிலைப்பள்ளி நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளியில், சம்விதா 485, காவிய ஸ்ரீ 477, தரன் 476, மதிப்பெண்கள் பெற்று, முறையே முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளனர்.
அரசு உதவி பெறும் கே.ஜி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
இப்பள்ளியில் காவியா 483, கலை ஸ்ரீ 482, ஷாலினி 480, மதிப்பெண்கள் பெற்று முறையே முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர். சாதித்த மாணவியருக்கு, பள்ளி தாளாளர் ராமசாமி, அறங்காவலர் சாந்தா மணி வாழ்த்து தெரிவித் தனர்.
கெம்ப நாயக்கன் பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி 97 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.இப்பள்ளியில் சோபியா 481, பிரியதர்ஷினி 459, கோகுல் 439, என முறையே முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர்.
ஆனையூர் அரசு மேல் நிலைப்பள்ளி 98 சதவீதமும், பொன்னே கவுண்டன் புதூர் அரசு உயர்நிலைப்பள்ளி 96 சதவீதமும், அன்னூர் அரசு மேல்நிலைப்பள்ளி 96 சதவீதமும், பசூர் ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி 95 சதவீதமும், சொக்கம்பாளையம் காந்திஜி அரசு மேல்நிலைப்பள்ளி 86 சதவீதம் தேர்ச்சியும் பெற்றுள்ளது.