அகற்றப்படாத பிளக்ஸ் பேனர்கள் கண்டுகொள்ளாத அதிகாரிகள்

1

அன்னூர்: அன்னூரில், மேட்டுப்பாளையம் சாலையில், பஸ் ஸ்டாண்டில் துவங்கி, கைகாட்டி வழியாக, ஓதிமலை சாலை கார்னர் வரை கடந்த மே 4ம் தேதி முதல் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப் பட்டன.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 'வழக்கமாக அன்னூரில் கைகாட்டியில் மூன்று நாட்கள் மட்டுமே பிளக்ஸ் பேனர்கள் வைக்க அதிகாரிகள் அனுமதி வழங்குவர். ஆனால் தற்போது வைக்கப்பட்டு 16 நாட்கள் ஆகியும் பிளக்ஸ் பேனர்கள் இதுவரை அகற்றப்படவில்லை.

கடந்த சில நாட்களாக சுழல் காற்றுடன் மழை பெய்கிறது. பிளக்ஸ் பேனர்கள் சாலையில் விழுந்தால் பெரும் விபரீதம் ஏற்படும். மேலும் இங்கு வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களில் அனுமதி எண், நாள் என எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

'பேரூராட்சி அதிகாரிகளும், போலீசாரும் உடனடியாக பிளக்ஸ் பேனர்களை அகற்ற வேண்டும்,' என, பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

Advertisement