தமிழகத்தில் மலர்ந்தது கூட்டணி ஆட்சி; ஆண்டவன் மீது ஆணையிட்டு 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு

28



சென்னை: முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவை, இன்று (மே 21) விரிவாக்கம் செய்யப்பட்டது. 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.

சட்டசபை தேர்தலில், த.வெ.க., 108 இடங்களில் வெற்றி பெற்றது. தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் ஆதரவோடு, ஆட்சி அமைத்தது. கடந்த 10ம் தேதி, முதல்வர் விஜய் மற்றும் ஒன்பது அமைச்சர்கள் பதவியேற்றனர்.

இந்நிலையில், இன்று (மே 21) காலை 10:00 மணிக்கு, கவர்னர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. தமிழக கவர்னர் அர்லேக்கரை பூங்கொத்து கொடுத்து முதல்வர் விஜய் வரவேற்றார். 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். அவர்களுக்கு தமிழக கவர்னர் அர்லேக்கர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

காங்கிரஸ் சார்பில், ராஜேஷ்குமார், விஸ்வநாதன் ஆகியோர், அமைச்சர்கள் ஆகினர். தமிழக அமைச்சரவையில், 59 ஆண்டுகளுக்கு பின், காங்கிரஸ் மீண்டும் இடம்பெற்றது. கோவை வடக்கு எம்எல்ஏ சம்பத்குமார் மற்றும் கிணத்துக்கடவு எம்எல்ஏ விக்னேஷ் ஆகிய இருவர் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். இதுவரை விஜயலட்சுமி (குமாரபாளையம்), கமலி (அவிநாசி), ஜெகதீஸ்வரி (ராஜபாளையம்), கீர்த்தனா (சிவகாசி) ஆகிய 4 பேர் இடம்பெற்றுள்ளனர்.

ஆண்டவன் மீது ஆணையிட்டு பதவியேற்ற அமைச்சர்கள் பெயர் பட்டியல்!

1. ஸ்ரீநாத்- துாத்துக்குடி (ஆண்டவன் மீது)


கல்வித்தகுதி: பிளஸ் 2

2. கமலி- அவிநாசி (ஆண்டவன் மீது)


கல்வித்தகுதி: எம்.ஏ., ஆங்கில இலக்கியம்

3.விஜயலட்சுமி- குமாரபாளையம் (ஆண்டவன் மீது)

கல்வித்தகுதி: பிளஸ் 2

4.ரஞ்சித்குமார்-காஞ்சிபுரம் (ஆண்டவன் மீது)


பி.ஏ., (திறந்தநிலை பல்கலை)

5.வினோத்- கும்பகோணம் (ஆண்டவன் மீது)


கல்வித்தகுதி: பி.இ., (இடைநிற்றல்)

6. ராஜிவ் - திருவாடானை (ஆண்டவன் மீது)

கல்வித்தகுதி: எம்.பி.பி.எஸ்.,

7.ராஜ்குமார் - கடலுார் (ஆண்டவன் மீது)


கல்வித்தகுதி: டிப்ளமோ (மெக்கானிக்கல் இன்ஜி.,)

8.காந்திராஜ்- அரக்கோணம் (ஆண்டவன் மீது)


கல்வித்தகுதி: பிஏ., (இடைநிற்றல்) ஐடிஐ (எலட்ரீசியன்)

9.மதன் ராஜா- ஒட்டப்பிடாரம் (ஆண்டவன் மீது)

கல்வித்தகுதி: பி.இ.,


10.ஜெகதீஸ்வரி- ராஜபாளையம் (ஆண்டவன் மீது)

கல்வித்தகுதி: பி.எஸ்சி.,

11.ராஜேஷ்குமார்- கிள்ளியூர் (ஆண்டவன் மீது)

''பெருந்தலைவர் காமராஜர் நாமம் வாழ்க, ராஜிவ்காந்தி நாமம் வாழ்க, ராகுல் காந்தி நாமம் வாழ்க'' என்று கூறி கிள்ளியூர் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ்குமார் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.

கல்வித்தகுதி: பி.எல்., (பெங்களூரு பல்கலை) எம்.ஏ., (விநாயகா மிஷன் பல்கலை)

12.விஜய் பாலாஜி- ஈரோடு கிழக்கு (ஆண்டவன் மீது)

கல்வித்தகுதி: பி.காம்., (சி.எஸ்.,)

13.லோகேஷ் தமிழ்செல்வன்- ராசிபுரம் (ஆண்டவன் மீது)


கல்வித்தகுதி: பி.காம்., (லயோலா கல்லுாரி) எம்.பி.ஏ.,

14.விஜய் தமிழன் பார்த்திபன்- சேலம் தெற்கு (ஆண்டவன் மீது)


கல்வித்தகுதி: பிளஸ் 2

15.ரமேஷ்- ஸ்ரீரங்கம் (ஆண்டவன் மீது)

கல்வித்தகுதி: பி.இ.,

16.விஸ்வநாதன்- மேலுார் (ஆண்டவன் மீது)

கல்வித்தகுதி: பி.ஏ., (சென்னை பல்கலை)

17.குமார்- வேளச்சேரி (ஆண்டவன் மீது)

கல்வித்தகுதி: பி.இ., (சிவில்)

18.தென்னரசு-ஸ்ரீபெரும்புதூர் (ஆண்டவன் மீது)

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு (தேர்ச்சி பெறவில்லை)

19.சம்பத் குமார்- கோவை வடக்கு (ஆண்டவன் மீது)

கல்வித்தகுதி: எம்பிஏ (தொலைதுார பட்டப்படிப்பு, அண்ணாமலை பல்கலை)

20.முகமது பர்வேஸ்- அறந்தாங்கி (ஆண்டவன் மீது)


கல்வித்தகுதி: பி.ஏ., எல்எல்பி (ஹானர்ஸ்)

21.சரத்குமார்- தாம்பரம் (ஆண்டவன் மீது)


கல்வித்தகுதி: பி.பி.ஏ.,

22.மரிய வில்சன்- ஆர்கே நகர் (ஆண்டவன் மீது)


கல்வித்தகுதி: பி.டெக்., எம்.பி.ஏ.,

23.விக்னேஷ்- கிணத்துக்கடவு (ஆண்டவன் மீது)


கல்வித்தகுதி: பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ்




@block_P@

ஒருவர் மட்டும்!

இன்று பதவியேற்ற 23 அமைச்சர்கள், ஏற்கனவே பதவியேற்ற முதல்வர் உள்ளிட்ட 10 பேரில், ஆதவ் ஒருவர் மட்டுமே உளமாற உறுதி கூறி பதவியேற்றவர்; மற்ற அனைவரும் ஆண்டவன் மீது உறுதி கூறி பதவியேற்றுள்ளனர்.block_P



@block_G@

குழு புகைப்படம்

தமிழக கவர்னர் அர்லேக்கர் மற்றும் முதல்வர் விஜய்யுடன் புதிய அமைச்சர்கள் குழு புகைப்படம் எடுத்து கொண்டனர்.block_G

மாவட்ட வாரியாக அமைச்சர்கள் எண்ணிக்கை:

* சென்னை-7

* நாமக்கல்- 3

* கோவை-2

* காஞ்சிபுரம்-2

* மதுரை-2

* ஈரோடு-2

* விருதுநகர்-2

* தூத்துக்குடி-2

* ராமநாதபுரம்-1

* திருப்பூர்-1

* செங்கல்பட்டு-1

* ராணிப்பேட்டை-1

* சிவகங்கை-1

* கன்னியாகுமரி-1

* திருச்சி-1

* கடலூர்-1

* தஞ்சாவூர்-1

* புதுக்கோட்டை-1

* சேலம்-1

தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

தமிழக புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா; தினமலர் வெப்சைட், யூடியூப் உள்ளிட்ட இணையத்தில் நேரலை ஒளிபரப்பு
வீடியோ பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement