பிளக்ஸ் பேனர்கள் அகற்றம்: 'தினமலர்' செய்தி எதிரொலி

அன்னுார்: 'தினமலர்' செய்தி எதிரொலியாக, பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டன.

அன்னுார், மேட்டுப்பாளையம் சாலையில், பஸ் ஸ்டாண்ட் முதல், கைகாட்டி வழியாக, ஓதிமலை ரோடு கார்னர் வரை, தமிழக வெற்றி கழகம் சார்பில், பல பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. மே 4ம் தேதி முதல் கடந்த 16 நாட்களாக வைக்கப்பட்டிருந்த பேனர்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக மே 21 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.

இதையடுத்து உடனடியாக பிளக்ஸ் பேனர்களை அகற்றும்படி அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்போடு மே 21 கைகாட்டியில் இருந்த ஏராளமான பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டன. இதையடுத்து பொதுமக்கள், அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

Advertisement