எஸ்.வி.பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி

சங்கராபுரம்: எஸ்.வி.பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு பொது தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

சங்கராபுரம் அடுத்த எஸ்.வி.பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இவ்வாண்டு நடந்த 10ம் வகுப்பு பொது தேர்வில் 64 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 64 பேரும் தேர்ச்சி பெற்று இப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி சாதனை படைத்துள்ளது. மாணவிகள் ஹரினி 500க்கு 483, கோகுலன் 472, சாருமதி 467 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்து சாதனை படைத்தனர். சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் இளையராஜா வரவேற்றார். சாதனை மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் பாராட்டி நினைவு பரிசு வழங்கினார். ஆசிரியர்கள் அசோகன், கோவிந்தராஜ், கனிமொழி, ராஜேந்திரன், பிரகாஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஆசிரியர் கோமதுரை நன்றி கூறினார்.

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற எஸ்.வி.,பாளையம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ் மற்றும் ஆசிரியர்களை சி.இ.ஓ., கார்த்திகா பாராட்டினார்.

Advertisement