கொள்முதல் விலை உயர்த்த சூரியமின் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

புதுடில்லி: நாட்டில் மின்சார தேவை உச்சத்தை எட்டியுள்ள நிலையில், மின்சார கொள்முதல் விலையின் உச்ச வரம்பை உயர்த்த வேண்டும் என்று சூரிய மின் உற்பத்தி நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளது.

தேசிய சூரிய எரிசக்தி கூட்டமைப்பு, மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத் திடம் தெரிவித்துள்ளதாவது:

தற்போது, மின் பரிவர்த்தனை சந்தைகளில் ஒரு யூனிட் மின்சாரத்துக்கு, உச்ச வரம்பாக 10 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடு காரணமாக, மின் உற்பத்தி நிறுவனங்கள் லாபகரமாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குறைந்த தேவை காலங்களில், மின் உற்பத்தியாளர்கள் குறைந்த விலைக்கு மின்சாரத்தை விற்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால், தேவை அதிகரிக்கும் நேரத்தில் கூட, விலை உச்சவரம்பை காரணம் காட்டி கொள்முதல் விலை அதிகரிக்காத நிலை உள்ளதை மாற்ற வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertisement