பெட்ரோல், டீசல் விற்பனையில் எந்தவித கட்டுப்பாடும் விதிக்கவில்லை; இந்தியன் ஆயில் நிறுவனம் .

புதுடில்லி: பெட்ரோல், டீசல் விற்பனையில் எந்தவித கட்டுப்பாடும் விதிக்கவில்லை என்று இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில்; இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சில்லறை விற்பனை நிலையங்கள் முழுவதும் எரிபொருள் விநியோகம் சீராக உள்ளது. பெட்ரோல், டீசல் விற்பனையில் எந்தவித கட்டுப்பாடுகளையும் விதித்து இந்தியன் ஆயில் நிறுவனம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. நாடு முழுவதும் விநியோக நடவடிக்கைகள் தொடர்ந்து சுமுகமாக நடைபெற்று வருகின்றன.

தற்போதைய சுழலில் டீசல் நுகர்வு அதிகமாக இருப்பதன் காரணமாகவே சமீபத்தில் தேவை அதிகரித்துள்ளது. விலை குறைவாக இருப்பதாலும், நிறுவனங்கள் மற்றும் வணிக ரீதியான நுகர்வோர்கள் சில்லறை எரிபொருள் விற்பனை நிலையங்களுக்கு மாறியதாலும் கூடுதல் தேவை ஏற்பட்டுள்ளது. எனவே, வாடிக்கையாளர்கள் பீதியடைந்து எரிபொருளை வாங்க வேண்டாம், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement