டெஸ்ட் டிராக் பழுது சரியானது

கோவை: வாகன லைசென்ஸ் பெறும் நடைமுறையை எளிதாக்க கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட தானியங்கி டெஸ்ட் டிராக்  பிப். மாதம் மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் திறக்கப்பட்டது. 

அதில் மக்கள் பைக், ஸ்கூட்டர், கார் ஓட்டி காண்பித்தனர். ஓட்டுபவரின் திறனை சென்சார் மூலம் கண்காணித்து தேர்வு நடத்தி லைசென்ஸ் வழங்கப்பட்டது.

திடீரென டிராக் சென்சார் பழுதானது. இதனால் பலரும் காத்திருந்தனர். இது குறித்து மத்திய ஆர்.டி.ஓ விஸ்வநாதன் கூறியதாவது: 

சாப்ட்வேரில் ஏற்பட்ட கோளாறை தொழில்நுட்ப வல்லுனர்கள்  சரிசெய்தனர். இனி பிரச்னை ஏற்படாது. மக்கள் வழக்கம் போல் டெஸ்ட் டிராக்கில் வாகனங்களை இயக்கி காண்பித்து, லைசென்ஸ் பெற்று செல்கின்றனர்.

Advertisement