சிறுவன் மாயம் : போலீஸ் விசாரணை

விழுப்புரம்: வீட்டில் இருந்து வெளியில் சென்ற சிறுவன் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

பண்ருட்டி அடுத்த பனப்பாக்கத்தை சேர்ந்தவர் பாலமுருகன் மகன் சுதீஷ்குமார், 11; இவர், விழுப்புரம் மேல்வன்னியர் தெருவில் உள்ள தனது உறவினர் சிவா என்பவரின் வீட்டில் தங்கி பூந்தோட்டம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார்.

சதீஷ்குமார் சரியாக படிக்காதது குறித்து கடந்த 18ம் தேதி சிவா கண்டித்தார். இதனால், கோபித்துக்கொண்டு வீட்டிலிருந்து வெளியில் சென்ற சுதீஷ்குமார் மீண்டும் திரும்பவில்லை.

பல இடங்களில் தேடியும் காணவில்லை. விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement