33 ரவுடிகள், 27 பிடிவாரன்ட் கைதிகள் தென் மாவட்டங்களில் கைது: ஐ.ஜி.,
மதுரை: தென் மாவட்டங்களில் குற்றங்களை தடுக்கவும், குற்றம் நடக்காமல் பாதுகாக்கவும் தொடங்கப்பட்ட 'ஷீல்ட்நெட்' நடவடிக்கையால், ஒரே நாளில் 33 ரவுடிகள், 27 பிடிவாரன்ட் கைதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக, தென் மண்டல ஐ.ஜி., விஜயேந்திர பிதாரி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
'ஷீல்ட்நெட்' நடவடிக்கை என்ற பெயரில், 10 மாவட்டங்களில் குற்ற பின்னணி உள்ளவர்கள், சந்தேக நபர்கள், பிடிவாரன்ட் உள்ளவர்கள், வாகன சோதனை, குற்றத்தடுப்பு, தடுப்புக்காவல் சோதனை மேற்கொள்ளப்பட்டன. 24 மணி நேரத்தில்-, 261 குற்ற பின்னணி கொண்டவர்கள் உட்பட 3,295 சந்தேக நபர்களிடம் விசாரிக்கப்பட்டது. 33 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட 27 பேர் கைது செய்யப்பட்டனர்.- 228 பேர் போலீஸ் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டனர்.
வாகன சோதனையில் பதிவு எண் இல்லாதது, அதிவேகமாக ஓட்டுதல், விபத்தை ஏற்படுத்தும் வகையில் பொருத்தப்பட்ட ஒளிரும் முகப்பு விளக்குகள் போன்ற காரணங்களுக்காக, 552 டூ - வீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்ந்து குற்றம் செய்பவர்களை அடையாளம் காணவும், ஜாமினில் வந்து குற்றங்களில் ஈடுபடுவோரையும் அடையாளம் கண்டு, ஜாமினை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட போலீசாரின் ஒருங்கிணைப்பே இதற்கு காரணம். இந்நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
நிழற்குடையில் இருக்கைகள் சேதம் சீரமைக்க பயணியர் வலியுறுத்தல்
-
மந்தவெளி அம்மனுக்கு பால்குட ஊர்வலம்
-
சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
-
விளம்பர விருப்பம் வித்யாசாகர் மகளிர் கல்லுாரி 17ம் ஆண்டு பட்டமளிப்பு விழா
-
ஜெயப்பிரியா பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா
-
தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி