கோடை விழா மலை பயிர்கள் கண்காட்சி காட்டேரி பூங்காவில் இன்று துவக்கம்

குன்னுார்: குன்னுார் காட்டேரி பூங்காவில், 2-வது மலை பயிர்கள் கண்காட்சி இன்று (22ம் தேதி) துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது.

கோடை விழாவை முன்னிட்டு குன்னுார் மேட்டுப்பாளையம் மலைபாதையில் அமைந்துள்ள காட்டேரி பூங்காவில் நடக்கும் நிகழ்ச்சிக்காக, 'பிரெஞ்சு மேரிகோல்டு, சால்வியா, பெட்டூனியா, டேலியா, ஜெரனியம்,' போன்ற மலர் நாற்றுகள் நடப்பட்டு, தற்போது பூத்து குலுங்குகின்றன.

இங்கு, 2வது மலை பயிர்கள் கண்காட்சி இன்று (22ம் தேதி) துவங்கி 24ம் தேதி வரை, 3 நாட்கள் நடக்கிறது.

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், நுங்கு, இளநீர்,பாக்கு, கொக்கோ ஆகியவற்றை கொண்டு கப்பல், நங்கூரம், கலங்கரை விளக்கம் மற்றும் மீன் பிடித்தல் போன்ற கடல் சார் வடிவங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

அரங்குகளில் விவசாயிகள் விளைவித்த தேயிலை, காபி உள்ளிட்ட பல்வேறு மலைப் பயிர்கள் அரங்குகளில் வைக்கப்பட்டுள்ளன. கோடை விடுமுறைக்கு ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் மலை பயிர் கண்காட்சிக்கு வர தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Advertisement