டேக்வாண்டோ: எதிஷா 'வெண்கலம்'

உல்லன்பாட்டர்: ஆசிய டேக்வாண்டோவில் இந்தியாவின் எதிஷா தாஸ், வெண்கலம் வென்றார்.
மங்கோலியாவின் உல்லன்பாட்டர் நகரில் 9வது ஆசிய டேக்வாண்டோ பூம்சே சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. பெண்கள் தனிநபர் -73 கிலோ பிரிவில் இந்தியா சார்பில் எதிஷா தாஸ் பங்கேற்றார். காலிறுதியில் எதிஷா, உஸ்பெகிஸ்தானின் ஜஸ்லினாவை எதிர்கொண்டார். இதில் எதிஷா 2-0 (1-0, 6-3) என வெற்றி பெற்றார்.
அடுத்து நடந்த அரையிறுதியில் எதிஷா, 2024 ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்ற சீனாவின் ஜியாவோ ஷுனனை சந்தித்தார். இதில் எதிஷா, 0-2 (3-4, 3-7) என தோல்வியடைய, வெண்கலப் பதக்கம் பெற்றார்.
ஆண்களுக்கான -58 கிலோ பிரிவில் இந்தியாவின் அப்துல் வாஹித், முதல் இரு போட்டியில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். இதில் தென் கொரியாவின் கிம் ஜோங் மையியாங்கை எதிர்கொண்டார். போராடிய அப்துல் வாஹித், 1-2 என (1-1, 9-3, 3-4) தோல்வியடைய, குறைந்தபட்சம் வெண்கலம் பெறும் வாய்ப்பு நழுவியது.

Advertisement