மேற்கு ஜெர்மனி கலக்கல்: உலக கோப்பை கால்பந்து
சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு ('பிபா') துவங்கி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, அதன் தலைமையிடமான சுவிட்சர்லாந்தில், ஐந்தாவது உலக கோப்பை கால்பந்து தொடர் 1954ல் (ஜூன் 16 - ஜூலை 4) நடந்தது. 16 அணிகள் பங்கேற்றன. ஆசியா சார்பில் தென் கொரிய அணி அறிமுகமானது.
போட்டிகள், லீக், 'நாக்-அவுட்' சுற்றுகளாக நடத்தப்பட்டன. லீக் சுற்று, 'ரவுண்ட்-ராபின்' முறையில் நடந்தது. 16 அணிகள், நான்கு பிரிவுகளாக விளையாடின. ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடம் பிடித்த அணிகள் 'நாக்-அவுட்' சுற்றுக்கு (காலிறுதி, அரையிறுதி, பைனல்) முன்னேறின.
இத்தாலி அதிர்ச்சி: லீக் சுற்றில் அசத்திய பிரேசில், யுகோஸ்லேவியா, ஹங்கேரி, மேற்கு ஜெர்மனி, உருகுவே, ஆஸ்திரியா, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து அணிகள் காலிறுதிக்கு முன்னேறின. பிரான்ஸ், இத்தாலி அணிகள் லீக் சுற்றோடு வெளியேறின.
காலிறுதியில் கலக்கிய ஹங்கேரி, உருகுவே, மேற்கு ஜெர்மனி, ஆஸ்திரியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இதில், ஹங்கேரி (4-2, எதிர்: உருகுவே), மேற்கு ஜெர்மனி (6-1, எதிர்: ஆஸ்திரியா) அணிகள் வென்றன.
பரபரப்பான மோதல்: பைனலில் ஹங்கேரி, மேற்கு ஜெர்மனி அணிகள் மோதின. ஆட்ட நேர முடிவில் போட்டி 2-2 என சமநிலையில் இருந்தது. பின் கூடுதல் நேரத்தில் மேற்கு ஜெர்மனியின் ரான் ஒரு கோல் அடிக்க, 3-2 என வெற்றி பெற்று முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இரண்டாவது இடத்தை ஹங்கேரி பெற்றது.
மூன்றாவது இடத்துக்கான போட்டியில், ஆஸ்திரிய அணி 3-1 என, உருகுவே அணியை வீழ்த்தியது. இத்தொடரில் நடந்த 26 போட்டியில், 140 கோல் பதிவானது. ஹங்கேரி அணியின் சண்டோர் காக்சிஸ் அதிகபட்சமாக 11 கோல் அடித்தார்.
'எக்ஸ்டிரா டைம்'
ரொனால்டோ '15'
உலக கோப்பை கால்பந்து வரலாற்றில் அதிக கோல் அடித்த பிரேசில் வீரர்கள் வரிசையில் ரொனால்டோ முதலிடத்தில் உள்ளார். நான்கு சீசனில் (1994, 1998, 2002, 2006) பங்கேற்ற இவர், 19 போட்டியில், 15 கோல் அடித்துள்ளார். அடுத்த இடத்தில் பீலே (12 கோல், 14 போட்டி) உள்ளார்.
* இரண்டு முறை (1994, 2002) ரொனால்டோ இடம் பிடித்திருந்த பிரேசில் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. ஒரு முறை (1998) பைனல் வரை சென்றது.
மேலும்
-
கட்டுமான பகுதியில் கம்பி வளைப்புக்கு விடைகொடுங்கள்!
-
கட்டுமான பணியில் காணப்படும் தவறான நம்பிக்கைகள்!
-
கட்டடத்தின் மேல்தளத்தில் புதிய வகை 'ஸ்லாப்' அமைக்கலாம்!
-
புதிய வீடு கட்ட எந்த வகை ஒப்பந்தத்தை எப்படி தேர்வு செய்ய வேண்டும்?
-
வீடு கட்டுவதா வாங்குவதாl: குழப்பத்துக்கு தீர்வு என்ன?
-
குறைந்த பரப்பளவு நிலத்தில் நெருக்கடி இல்லாமல் வீடு கட்டுவது அவசியம்!