சிவானந்த் நீலண்ணனவரின் ரூ.250 கோடி முடக்கம் குத்தாட்ட நடிகை சன்னி லியோனுக்கு ரூ.ஒரு கோடி கொடுத்தது அம்பலம்
பெலகாவி: அதிக வட்டி தருவதாக ஆசை காண்பித்து, 35,000க்கும் மேற்பட்டோரிடம், 4,500 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்த, சிவம் அசோசியேட்ஸ் உரிமையாளர் சிவானந்த் நீலண்ணனவரின் வங்கி கணக்குகளில் இருந்த, 250 கோடி ரூபாயை, சி.ஐ.டி., போலீசார் முடக்கி உள்ளனர்.
பெலகாவியில் சிவம் அசோசியேட்ஸ் உரிமையாளர் சிவானந்த் நீலண்ணனவர், அதிக வட்டி தருவதாக ஆசை காண்பித்து, 35,000க்கும் மேற்பட்டோரிடம், 4,500 கோடி ரூபாய் வரை வசூலித்து மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த வாரம் அவரது வீடு, அலுவலகங்களில் பெலகாவியின் மாளமாருதி போலீசார், கூட்டுறவுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, ஆவணங்களை ஆய்வு செய்தனர்.
விதிமுறை மீறல் அதில், அவர் முறைகேடாக முதலீடு வசூலித்ததும், ரிசர்வ் வங்கி விதிமுறைகளை மீறியதும் தெரிந்தது.
எனவே, அவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கை சி.ஐ.டி., போலீஸ் விசாரணைக்கு, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. சி.ஐ.டி., அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவானந்த் நீலண்ணவருக்கு வந்துள்ள முதலீட்டை பார்த்து, அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
2017 முதல், 2024 வரையிலான ஏழு ஆண்டுகளில், இவருக்கு தினமும் சராசரியாக, 50 லட்சம் ரூபாய் முதலீடு வந்துள்ளது. 2025ல் மட்டும், 945 கோடி ரூபாய் முதலீடு வந்திருப்பதை, ஆவணங்கள் உறுதிப்படுத்துகிறது.
முதலீட்டை ஈர்க்க அவர் பல வழிகளை கையாண்டுள்ளார். பெரிய, பெரிய ஹோட்டல்கள், சொகுசு திருமண மண்டபங்கள், பொது இடங்களில் பெரிய கூட்டங்கள் நடத்தி உள்ளார்.
மக்களின் நம்பிக்கையை பெறும் வகையில், பழைய முதலீட்டாளர்களை வரவழைத்து கவுரவித்துள்ளார்.
அவரது வங்கி கணக்குகளை ஆய்வு செய்த போது, கோடிக்கணக்கான ரூபாய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரே வங்கி கணக்கில், 200 கோடி ரூபாய், மற்ற, 14 கணக்குகளில், 50 கோடி ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தொகையை, அதிகாரிகள் முடக்கி உள்ளனர்.
முதலீடுகள் எங்கே? தற்போது சிவானந்த் நீலண்ணனவர் மற்றும் அவரது தொழில் பங்குதாரர் சுபாஷ் நந்தரகியிடமும், தீவிர விசாரணை நடக்கிறது. பொது மக்களின் பணத்தை எங்கெங்கு முதலீடு செய்துள்ளனர் என்பதை பற்றி, தகவல் சேகரிக்கின்றனர்.
இதற்கிடையே, இப்பணத்தை பயன்படுத்தி, 2023ல் கன்னடத்தில், சாம்பியன் என்ற படத்தை இவர் தயாரித்தார்.
இதில் ஒரே ஒரு பாடலுக்கு, குத்தாட்டம் போட்ட நடிகை சன்னி லியோனுக்கு ஒரு கோடி ரூபாய் ஊதியம் கொடுத்ததும் தெரிய வந்துள்ளது. ஆனால் அந்த திரைப்படம் தோல்வி அடைந்தது.
மேலும்
-
நிழற்குடையில் இருக்கைகள் சேதம் சீரமைக்க பயணியர் வலியுறுத்தல்
-
மந்தவெளி அம்மனுக்கு பால்குட ஊர்வலம்
-
சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
-
விளம்பர விருப்பம் வித்யாசாகர் மகளிர் கல்லுாரி 17ம் ஆண்டு பட்டமளிப்பு விழா
-
ஜெயப்பிரியா பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா
-
தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி