மணல் கடத்தல் இடங்களில் லோக் ஆயுக்தா சோதனை
பாகல்கோட்: சட்ட விரோதமாக மணல் கடத்தல் நடந்த, பல இடங்களில் லோக் ஆயுக்தா போலீசார் திடீர் சோதனை நடத்தினர். மணல் கடத்தியவர்களின் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள உபகரணங்கள், பறிமுதல் செய்யப்பட்டன.
பாகல்கோட் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மணல் கடத்தல் நடப்பதாக, லோக் ஆயுக்தாவுக்கு புகார் வந்தது. அந்த இடங்களில் சோதனை நடத்தும்படி, லோக் ஆயக்தா தலைமை நீதிபதி பி.எஸ்.பாட்டீல் உத்தரவிட்டார். இதன்படி, பாகல்கோட் லோக் ஆயுக்தா எஸ்.பி., மஹாநிங நந்தகாவி தலைமையில், நேற்று பல்வேறு இடங்களில் சோதனை நடந்தது.
முதோல், பாதாமி, ஹுன்குந்த், இளகல், ஜமகன்டி, பாகல்கோட் நகரங்களின் 24 இடங்களில் சோதனை நடந்தது.
பெருமளவில் மணல் கடத்தல் நடப்பதை கண்டுபிடித்தனர். மொத்தம், 65 டிப்பர்கள், 18 ஹிடாச்சி இயந்திரங்கள், ஆறுகளில் இருந்து மணல் அள்ள 14 மின்விசை படகுகள், ஆறு டிராக்டர்கள், ஜே.சி.பி., இயந்திரம் என, பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள், பறிமுதல் செய்யப்பட்டன.
சட்ட விரோத மணல் கடத்தலை தடுக்க தவறிய, பாகல்கோட் மாவட்ட கலெக்டர், பெங்களூரின் சுரங்கம், நில ஆய்வியல் துறை இயக்குநர், நுணை இயக்குநர், பாதாமி, ஜமகன்டி, ஹுன்குந்த், இளகல் தாலுகா தாசில்தார்கள் மீது, லோக் ஆயுக்தா அதிகாரிகள் புகார் பதிவு செய்தனர். விசாரணையை துவக்கி உள்ளனர்.
மேலும்
-
நிழற்குடையில் இருக்கைகள் சேதம் சீரமைக்க பயணியர் வலியுறுத்தல்
-
மந்தவெளி அம்மனுக்கு பால்குட ஊர்வலம்
-
சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
-
விளம்பர விருப்பம் வித்யாசாகர் மகளிர் கல்லுாரி 17ம் ஆண்டு பட்டமளிப்பு விழா
-
ஜெயப்பிரியா பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா
-
தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி