பெண் சிசு கருக்கலைக்க முயற்சி கள்ளக்குறிச்சி மருந்தக உரிமையாளர் கைது

ஆத்துார்; கெங்கவல்லி அருகே நாகியம்பட்டியை சேர்ந்த கூலித் தொழிலாளி அன்பழகன் மனைவி சோபிகா, 25. இவர்களுக்கு ஏற்கனவே பெண் குழந்தை உள்ள நிலையில், மீண்டும் சோபிகா கர்ப்பமானார். வளையமாதேவியை சேர்ந்த, சுகா-தார தன்னார்வலர் மதுபாலா, 31, நர்சிங் படித்-துள்ள, பெரியேரி கவுரி, 31, உதவியுடன் பரிசோ-தனை செய்தபோது, கருவில் மீண்டும் பெண் சிசு இருப்பது தெரிந்தது.

தொடர்ந்து சித்தேரி தனியார் மருந்தக உரிமை-யாளர் புவனேஸ்வரி, 32, அறிவுறுத்தல்படி, கள்-ளக்குறிச்சி மருந்தக உரிமையாளர் நாராயணன், 42, என்பவரிடம், கருக்கலைப்பு மாத்திரை பெற்று உட்கொண்டார். அதில் சோபிகா உடல் பலவீன-மாக, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவம-னையில் அறுவை சிகிச்சை மூலம் சிசு அகற்றப்-பட்டது.
ஆத்துார் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் ஜெயலட்சுமி புகாரில், 6 பேர் மீது தலைவாசல் போலீசார் வழக்குப்பதிந்தனர். அதில் நேற்று முன்தினம், மதுபாலா, புவனேஸ்-வரி, கவுரியை கைது செய்தனர். நேற்று நாராய-ணனை கைது செய்தனர். மேலும் சோபிகாவின் கணவர் அன்பழகன், தனியார் மருத்துவமனை மேலாளர் பிரபுவை தேடுகின்றனர்.

Advertisement