வடிகால் வசதி இல்லாததால்சாலையில் ஓடும் தண்ணீர்
கரூர்::கரூர் அருகே, வடிகால் வசதி இல்லாததால், சின்டெக்ஸ் தொட்டி தண்ணீர் தேங்கியும், சாலையிலும் ஓடுவதால் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.
கரூர் அருகே, கொளந்தாகவுண்டனுார் பகுதியில், 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதனால், பல ஆண்டுகளுக்கு முன், அந்த பகுதியில் புதிதாக போர்வெல் அமைக்கப்பட்டு, மின் மோட்டார் வசதியுடன், சின்டெக்ஸ் தொட்டி அமைக்கப்பட்டது. இப்பகுதி மக்கள் தண்ணீர் பிடித்து வருகின்றனர்.
இந்நிலையில், சின்டெக்ஸ் தொட்டியை சுற்றி, வடிகால் வசதி இல்லை. இதனால் தண்ணீர் தேங்கியும், சாலையிலும் ஓடுகிறது. அதில், கொசு உற்பத்தி மற்றும் தொற்று நோய் அபாயம் உள்ளது. இதுகுறித்து புகார் தெரிவித்தும், மாநகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் உள்ளனர். சின்டெக்ஸ் தொட்டி கழிவுநீர் செல்லும் வகையில், வடிகால் வசதியை மாநகராட்சி நிர்வாகம் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.