கொலை முயற்சி: 4 ரவுடிக்கு 7 ஆண்டு சிறை உறுதி
சேலம்; சேலம், ஜாகீர் அம்மாபாளை யத்தை சேர்ந்த ரவுடிகள் அருண், 33, ராஜமாணிக்கம், 32, சூர்யா, 35, மஞ்சுநாத், 36. இவர்களுக்கும், ஜாகீர் சின்ன-மாபாளையத்தை சேர்ந்த அருண்குமார், அற்பு-தராஜ் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் இருந்தது.
இதில், 2022ல் தகராறு ஏற்பட, ரவுடிகள் சேர்ந்து, இருவரையும் தாக்கினர். அவர்கள் புகார்-படி, சூரமங்கலம் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிந்தனர். தொடர்ந்து வழக்கு தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. அதில், 4 பேருக்கும், 7 ஆண்டுகள் சிறை தண்-டனை விதிக்கப்பட்டது.
அவர்கள், நீதிமன்ற முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, ஜாமினில் வந்தனர். இந்த வழக்கு நேற்று முன்-தினம் விசாரணைக்கு வந்தது. அதில் 4 பேரின் அப்பீலை ரத்து செய்து, கீழ் நீதிமன்றம் விதித்த தண்டனை செல்லும் என, நீதிமன்றம் உறுதிப்ப-டுத்தியது. இதனால் சூரமங்கலம் போலீசார் அருண், ராஜமாணிக்கம், சூர்யா, மஞ்சுநாத்தை, நேற்று கைது செய்தனர்.