பெட்ரோல் விலை உயர்வை கண்டித்துகம்யூ., கட்சிகள் ஆர்ப்பாட்டம்



கரூர்::கரூர் ஜவகர் பஜாரில் உள்ள தலைமை தபால் நிலையம் முன், கம்யூ., கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சி.பி.ஐ.எம்.எல். மாவட்ட செயலர் பொன்னுரங்கம் தலைமை வகித்தார். போக்​கு​வரத்​து, அத்​தி​யா​வசிய பொருட்​கள் விலை உயர்​வுக்கு காரண​மான பெட்​ரோல், டீசல் விலை உயர்வை கைவிட வேண்டும்.

உணவகங்​கள், சிறு தொழில்​கள் மூட காரண​மான வணிக சிலிண்​டர் விலை உயர்வை கைவிட வேண்​டும் என ஆர்ப்​பாட்​டத்​தில் வலி​யுறுத்​தினர்.
மா.கம்யூ., மாவட்ட செயலர் ஜோதிபாசு. மாநகர செயலர் தண்டபாணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜமுக
முது, முருகேசன், இ.கம்யூ., மாவட்ட செயலர் கலாராணி உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement