கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சேர்க்கைஇன்று தனியார் பள்ளிகளில் மாணவர்கள் தேர்வு
கரூர்::இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் விண்ணப்பித்தவர்களுக்கு, குலுக்கல் முறையில் மாணவ, மாணவியர் சேர்க்கை இன்று நடக்கிறது என, கரூர் கலெக்டர் முத்துக்குமரன் தெரிவித்தார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:கரூர் மாவட்டத்தில், 94 தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் நடப்பு கல்வியாண்டில், 25 சதவீதம் அடிப்படையில் தனியார் பள்ளிகளில், 1,092 இடங்கள் உள்ளன. இதற்கு, 1,516 விண்ணப்பங்கள் இணையம் வழியாக பெறப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு குலுக்கல் முறையில் மாணவ, மாணவியர் இன்று தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த நிகழ்ச்சி, அனைத்து தனியார் பள்ளிகளிலும் விண்ணப்பித்த மாணவர், பெற்றோர்களின் முன்னிலையில் குலுக்கல் நடக்கும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.