போக்சோ வழக்கில் கைதானகண்டக்டருக்கு 21 ஆண்டு சிறை
ப.வேலுார்::-போக்சோ வழக்கில் கைதான கண்டக்டருக்கு, 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, நாமக்கல் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டியை சேர்ந்த மாணவி, தினமும் தனியார் பஸ்சில் பள்ளிக்கு சென்று வந்துள்ளார். அப்போது மாணவிக்கு ராசிபுரத்தை சேர்ந்த பஸ் டிரைவர் ராஜேந்திரன், வேலகவுண்டம்பட்டியை சேர்ந்த கண்டக்டர் சுரேஷ்குமார், 37, ஆகியோர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர்.
இது குறித்து மாணவியின் பெற்றோர், ப.வேலுார் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் கடந்த 2018ம் ஆண்டு ஜனவரியில் புகார் அளித்தனர். இதையடுத்து, போக்சோவில் இருவரையும் மகளிர் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு நாமக்கல் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தபோது, டிரைவர் ராஜேந்திரன் இறந்துவிட்டார்.
இந்நிலையில், நேற்று நாமக்கல் மகளிர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதில், குற்றம் நிரூபிக்கப்பட்ட சுரேஷ்குமாருக்கு, 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததார். மேலும், 5,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
கடந்த 8 ஆண்டுகளாக போக்சோ வழக்கு நடந்த வந்த நிலையில், சிறப்பாக பணியாற்றிய ப.வேலுார் மகளிர் போலீசாருக்கு, இன்ஸ்பெக்டர் உமா சங்கர் பாராட்டு தெரிவித்தார்.
மேலும்
-
நிழற்குடையில் இருக்கைகள் சேதம் சீரமைக்க பயணியர் வலியுறுத்தல்
-
மந்தவெளி அம்மனுக்கு பால்குட ஊர்வலம்
-
சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
-
விளம்பர விருப்பம் வித்யாசாகர் மகளிர் கல்லுாரி 17ம் ஆண்டு பட்டமளிப்பு விழா
-
ஜெயப்பிரியா பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா
-
தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி