முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது கொலை முயற்சி வழக்கு

38

சென்னை: தேர்தலின் போது தவெக வேட்பாளர் உள்பட பலரின் மீது தாக்குதல் நடத்தியதாக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிந்துள்ளனர்.

சென்னை துறைமுகம் தொகுதியில் திமுக முன்னாள் அமைச்சரும், வேட்பாளருமான சேகர் பாபு மற்றும் தவெக வேட்பாளர் சினோரா அசோக் ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, சேகர் பாபு கொலை மிரட்டல் விடுத்து, தன்னை தாக்கியதாக சினோரா அசோக் புகார் கூறினார். மேலும், தனக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுவும் தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொலை முயற்சி, சட்ட விரோதமாக கூடுதல், அத்துமீறுதல், குற்றம் செய்யும் நோக்கத்துடன் மிரட்டுதல் ஆகிய குற்றச்சாட்டுகளுக்கான சட்டப் பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் தேர்தல் விதிமுறை மீறியதாகவும் ஒரு பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.

Advertisement