'இந்தியா போஸ்ட் - பிளிப்கார்ட்' விரைவான டெலிவரிக்கு ஒப்பந்தம்

புதுடில்லி: இ - காமர்ஸ் நிறுவனமான 'பிளிப்கார்ட்', தனது பார்சல் வினியோக சேவையை மேம்படுத்த அஞ்சல் துறையுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இந்நிறுவனங்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவித்ததாவது:

இந்தியா போஸ்ட், பிளிப்கார்ட் இந்தியா இணைந்து 'லாஸ்ட் மைல்' பார்சல் டெலிவரி சேவைக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தால், பிளிப்கார்ட்டின் பார்சல்களை, வாடிக்கையாளர்களின் முகவரியில் இந்தியா போஸ்ட் நேரடியாக கொண்டு சேர்க்கும்.

நகரம், சிறு நகரம், கிராமம் மற்றும் தொலைதூர பகுதிகளிலும், நாடு முழுதும் உள்ள இந்தியா போஸ்ட் தனது வலையமைப்பை பயன்படுத்தி விரைவாக பார்சல் வினியோகம் செய்யப்படும்.

முன்கூட்டியே பணம் செலுத்தப்பட்ட பார்சல்கள், கேஷ் ஆன் டெலிவரி பார்சல்கள், ஓ.டி.பி., அடிப்படையிலான டெலிவரி உறுதிப்படுத்தல், நிகழ்நேர டிராக்கிங் வசதி உள்ளிட்ட சேவைகளும் வழங்கப்படும்.

வேகமாக வளர்ந்து வரும் இந்திய இ-காமர்ஸ் துறையின் லாஜிஸ்டிக்ஸ் உள்கட்டமைப்பை, இந்த கூட்டணி மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement