அடுத்த வாரம் டில்லி செல்கிறார் முதல்வர் விஜய்!
நமது நிருபர்
தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக அடுத்த வாரம் விஜய் டில்லிக்கு செல்கிறார். அவர் அங்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேச உள்ளார்.
தமிழகத்தில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசுக்கு, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. மாநிலத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதும், டில்லி சென்று ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை முதல்வர் சந்திப்பது மரபு.
மேலும், நிதி மற்றும் நிர்வாகரீதியாக மத்திய அரசின் ஒத்துழைப்பும், மாநில முதல்வருக்கு மிகவும் அவசியம். இதன் காரணமாகவே, முக்கிய திட்டங்கள் குறித்த கோரிக்கைகளுடன், டில்லியில் உள்ள அதிகார மையங்களை முதல்வர்கள் சந்தித்து வலியுறுத்துவர்.
அந்த வகையில், தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக அடுத்த வாரம் விஜய் டில்லிக்கு செல்கிறார்.
இதற்கான பணிகள், டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் துவங்கியுள்ளன. டில்லி செல்லும் விஜய் பிரதமர் மோடி, நிதியமைச்சர் மற்றும் மூத்த அமைச்சர்களை சந்திக்கிறார். இந்த பயணத்தில் தமிழகத்திற்கான நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற விஜய் திட்டமிட்டு இருக்கிறார்.
இதற்காக, அவர் கோரிக்கை மனுக்களையும் தயார் செய்யும் பணியையும் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து மேற்கொண்டு வருகிறார். மறுபுறம் டில்லியில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரையும் விஜய் சந்திக்கிறார்.
தன் அரசை ஆதரிக்கும் இடதுசாரி கட்சிகளின் டில்லி அலுவலகங்களுக்கும் விஜய் சென்று, மா.கம்யூ., பொதுச்செயலர் பேபி, இ.கம்யூ., மூத்த தலைவர் டி.ராஜா ஆகியோரையும் நேரில் சந்தித்து, நன்றி தெரிவிக்க விஜய் திட்டமிட்டுள்ளார். டில்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலையில் திருவள்ளூவர் சிலையையும் திறந்து வைக்க இருக்கிறார்.
தொலைபேசியில் உரையாடலாமே, தனி விமானத்தின் எரிபொருளை மிச்சப்படுத்தலாம். மேலும் விமானப்பயணம் ஆபத்தானது.
கே என் பேரு மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யபட்டதா???
ஆமா, செந்தில் பாலாஜியை விசாரிக்க வேண்டும் என ED கடிதம் அனுப்பியதே, அனுமதி கொடுத்தீர்களா?
சுய நிதி கல்லூரிகளின் கொள்ளைக்கு ஒரு முடிவு கட்டுங்கள் முதல்வரே. அப்பாவி மக்களின் அறியாமையை வைத்து அவர்களின் உழைப்பை சுரண்டும் பண முதலைகளிடம் இருந்து காப்பாற்றுங்கள் . மொத்த இடங்களையும் கவுன்சிலிங் மூலமே நிரப்புங்கள். நிர்வாக ஒதிக்கீட்டிற்கான 50% இடங்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள கூடுதல் கட்டணங்களை கல்லூரி நிர்வாகம் பெற்றுக்கொள்ளட்டும் . நீதியை நிலை நாட்டுங்கள் . கொள்ளை கும்பலிடம் இருந்து அப்பாவி மக்களை காப்பாற்றுங்கள் . பி எப் ஊழலை அகற்றியது போல இதையும் ஒழித்து காட்டுங்கள் . நிச்சயம் மக்கள் உங்களை நிஜ ஹீரோவாக மதிப்பார்கள் ..
இந்த தர்மபிரபு நடத்தும் பள்ளியை என்ன செய்வது?மேலும்
-
நிழற்குடையில் இருக்கைகள் சேதம் சீரமைக்க பயணியர் வலியுறுத்தல்
-
மந்தவெளி அம்மனுக்கு பால்குட ஊர்வலம்
-
சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
-
விளம்பர விருப்பம் வித்யாசாகர் மகளிர் கல்லுாரி 17ம் ஆண்டு பட்டமளிப்பு விழா
-
ஜெயப்பிரியா பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா
-
தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி