ஐ.டி.ஐ.,வளாகத்தேர்வு
தேனி, மே 23
தேனி கம்மவார் சங்கம் ஐ.டி.ஐ.,யில் கோவை ஜே.வி.என்., இன்ஜினியரிங் லிமிடெட் நிறுவனம் சார்பில் வளாகத்தேர்வு நடந்தது. சங்க தலைவர் நம்பெருமாள்சாமி தலைமை வகித்தார். ஐ.டி.ஐ., செயலாளர் பெருமாள்சாமி முன்னிலை வகித்தார். ஐ.டி.ஐ., முதல்வர் பிரகாசம் வரவேற்றார். இன்ஜினியரிங் நிறுவன இயக்குநர் ஜோஸ்பேபி மாணவர்களிடம் நேர்காணல் நடத்தினார். இதில் பிட்டர், எலக்ட்ரிசியன், ஒயர்மேன் பிரிவுகளில் படிக்கும் இறுதியாண்டு மாணவர்கள் 54 பேர் பங்கேற்றனர். 18 பேர் வளாகத்தேர்வில் பணிக்கு தேர்வாகினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement