125 பள்ளி வாகனங்கள் சோதனை 15 வாகனங்களுக்கு அனுமதி ரத்து
சென்னை, மே 23–
மந்தைவெளி, திருவான்மியூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் நடந்த ஆய்வில், ஜி.பி.எஸ்., கருவி, அவசர கதவு சரியில்லாத 15 வாகனங்களுக்கான அனுமதி, தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
மந்தைவெளி, திருவான்மியூர் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் கட்டுபாட்டில், 178 பள்ளி வாகனங்கள் இயங்கி வருகின்றன. புதிய கல்வி ஆண்டு தொடங்க உள்ளதையொட்டி, இந்த வாகனங்களுக்கான கூட்டு ஆய்வு, நேற்று ஆர்.ஏ.புரத்தில் உள்ள செட்டிநாடு பள்ளியில் நடத்தப்பட்டது.
கிண்டி வருவாய் கோட்டாட்சியர் ரங்கராஜன், வட்டார போக்குவரத்து அலுவலர் கார்த்திகேயன், ஆய்வாளர் முகுந்தன் உள்ளிட்டோர், 125 பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனர்.
இதில், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வேக கட்டுப்பாட்டுக் கருவி, அவசர கால வழி, வாகனத்தின் முன் பின் கண்காணிப்பு கேமராக்கள், முதலுதவி பெட்டி மற்றும் தீயணைப்புக்கருவி உட்பட வாகனத்தின் தரம் குறித்தும், பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டன.
இதில், வேகக்கட்டுப்பாட்டு கருவி, அவசர கால வழி சரியில்லாத, 15 வானகங்களுக்கு தகுதி சான்று தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. முன்னதாக, அனைத்து பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கும் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில், இலவசமாக கண் பரிசோதனை செய்யப்பட்டது.
அதை தொடர்ந்து, அவசர காலத்தில் முதலுதவி எப்படி செய்வது என்பது குறித்து, செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும்
-
நிழற்குடையில் இருக்கைகள் சேதம் சீரமைக்க பயணியர் வலியுறுத்தல்
-
மந்தவெளி அம்மனுக்கு பால்குட ஊர்வலம்
-
சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
-
விளம்பர விருப்பம் வித்யாசாகர் மகளிர் கல்லுாரி 17ம் ஆண்டு பட்டமளிப்பு விழா
-
ஜெயப்பிரியா பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா
-
தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி