காஞ்சி அரசு இசைப்பள்ளியில் சேர மாணவ – மாணவியருக்கு அழைப்பு
காஞ்சிபுரம், மே 23-–
காஞ்சிபுரத்தில் இயங்கும் அரசு இசைப்பள்ளியில் சேர, மாணவ – மாணவியர் விண்ணப்பிக்கலாம் என, இசைப்பள்ளியின் தலைமையாசிரியர் ரமணி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் கலை மற்றும் பண்பாட்டுத் துறையால் நடத்தப்படும் காஞ்சிபுரம் மாவட்ட அரசு இசைப்பள்ளி, காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சதாவரம் பகுதியில் இயங்கி வருகிறது.
இப்பள்ளியில், தமிழகத்தின் பாரம்பரியக் கலைகளான குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய ஏழு கலைப் பிரிவுகளில், மூன்றாண்டு சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படுகிறது. 2026- – 27ம் ஆண்டுக்கான சேர்க்கை, இப்போது நடைபெறுகிறது. பள்ளியில் சேர, 7ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பயிற்சி வகுப்புகள், வார நாட்களில், காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை நடைபெறுகிறது. இங்கு, 12 வயது முதல், 25 வயது வரையிலானள ஆண், பெண் என இருபாலரும் சேரலாம். பயிற்சிக் காலம் மூன்று ஆண்டுகள். மாணவர்களுக்கு, மாதந்தோறும் 1,000 ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படும்.
இசைப்பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு, வளாக நேர்காணல் வாயிலாக, தனியார் பள்ளிகளில் இசை ஆசிரியராக பணிபுரியவும் நாதஸ்வரம், தவில், தேவாரம் பயின்ற மாணவர்கள், அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பணிபுரியவும் வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகிறது.
மேலும் விபரம் வேண்டுவோர், இசைப்பள்ளி அலுவலகத்தை, 94425 72948 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, பள்ளி தலைமையாசிரியை ரமணி தெரிவித்துள்ளார்.
மேலும்
-
நிழற்குடையில் இருக்கைகள் சேதம் சீரமைக்க பயணியர் வலியுறுத்தல்
-
மந்தவெளி அம்மனுக்கு பால்குட ஊர்வலம்
-
சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
-
விளம்பர விருப்பம் வித்யாசாகர் மகளிர் கல்லுாரி 17ம் ஆண்டு பட்டமளிப்பு விழா
-
ஜெயப்பிரியா பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா
-
தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி