"பாதாள சாக்கடை பணிகள் மாஜி அமைச்ச் ஆய்வு /dc
அருப்புக்கோட்டை, மே 23-
அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ.,, பாதாள சாக்கடை திட்ட பணிகள் குறித்தான ஆய்வு கூட்டம் அதிகாரிகளுடன் நடத்தினார்.
சாத்தூர் ராமச்சந்திரன் எம்எல்ஏ நேற்று அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி கமிஷனர் பாலமுருகன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் பணிகள் குறித்து கேட்டறிந்தார். பணிகள் முடிவடைந்த பகுதிகளில் வாறுகால் மற்றும் ரோடு பணிகளை செய்யவும், மீதமுள்ள இடங்களில் திட்ட பணிகளை விரைவாக முடிக்கவும், வைகை மற்றும் தாமரபரணி குடிநீர் முழுமையாக வருகிறதா என்பதையும், நகரில் குடிநீர் தங்கு தடை இன்றி வழங்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
உடன், முன்னாள் ஒன்றிய சேர்மன் சுப்பாராஜ் முன்னாள் நகராட்சி தலைவர் சிவப்பிரகாசம், நகராட்சி துணைத் தலைவர் பழனிச்சாமி, தி.மு.க., நகர செயலர் மணி மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.
----