10ம் வகுப்பு கணிதத்தில் 266 மாணவர்கள் தோல்வி
தேனி, மே 23- தேனி மாவட்டத்தில் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 200 பள்ளிகளைச் சேர்ந்த 6931 மாணவர்கள், 7031 மாணவிகள் என மொத்தம் 13,962 பேர் தேர்வு எழுதினர். இதில் 6566 மாணவர்கள், 6858 மாணவிகள் என 13,424 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்ச்சி விகிதம் 96.15 சதவீதம் ஆகும். சுமார் 538 பேர் தோல்வி அடைந்தனர். தோல்வி அடைந்தவர்கள் அதிகபட்சமாக கணித தேர்வில் 266 பேர், சமூக அறிவியல் 201 பேர், தமிழ் 105 பேர், ஆங்கிலம் 85 பேர், அறிவியலில் 45 மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement